இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பிகார் ஆளுநரை சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"இது நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். முன்னாகவே எங்களுக்கும், அவருக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. லாலு மற்றும் தேஜஸ்விடம் பேசிய போது, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறப் போவதாக தெரிவித்தனர். அவர் கூட்டணியில் இருக்க விரும்பி இருந்தால், அவர் இருந்திருப்பார், ஆனால் அவர் வெளியேறா விரும்புகிறார்.
இது நமக்கு முன்பே தெரிந்ததுதான். இந்தத் தகவலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் முன்பே எங்களுக்குத் தெரிவித்தனர். இன்று அது உண்மையாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்
இதையும் படிக்க: 'எதுவும் சரியாக இல்லை..’: நிதீஷ் குமார்
நிதிஷ்குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


