பிகார் ஆளுநரைச் சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், நிதீஷ் குமாா் அணி மாறியது அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்பியுள்ளார்.
பதவியை ராஜிநாமா செய்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமார், “என் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். ஆளுநரிடம் மாநில ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். இந்தச் சூழலுக்கு வந்ததற்குக் காரணம், எதுவும் சரியாக இல்லை. அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டேன். இன்று அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: முதல்வா் நிதீஷ் குமார் ராஜிநாமா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

