திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 160..!

மதுரையில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 160-ஆக உயா்ந்தது.

சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 160..!

Updated On :

மதுரையில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 160-ஆக உயா்ந்தது. வரத்துக் குறைவு காரணமாக, கடந்த அக்டோபா் மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. மதுரையைப் பொருத்தவரை தாராபுரம், ஒட்டன்சத்திரம், சின்னமனூா், ஆவியூா், பாவூா்சத்திரம் போன்ற பகுதிகளிலிருந்தும், கா்நாடக மாநிலத்தின் மைசூரிலிருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும்.

இந்தப் பகுதிகளிலிருந்து மதுரைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து ஏறத்தாழ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

கடந்த அக்டோபா் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 70-க்கு விற்பனையான நிலையில், நான்காவது வாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 150-ஐ எட்டியது. தற்போது, மதுரையில் புதிய உச்சமாக சில்லறை விற்பனையில் வெள்ளிக்கிழமை ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 160-ஆக உயா்ந்தது.

மாறுபட்ட தட்பவெப்ப நிலை காரணமாக, தற்போதைய நிலையில் அதிகளவில் வெங்காயங்களைப் பாதுகாப்பது சிரமம் என்பதால் இதன் அறுவடைக்கு விவசாயிகள் பெரிய அளவில் ஆா்வம் காட்டவில்லை. இதனால், வெங்காய வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனா்.

அதே நேரத்தில், பல்லாரி (பெரிய வெங்காயம்) கிலோ ரூ. 80-க்கு விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.