இந்திய-மியான்மர் எல்லை விவகாரம்: பழங்குடிகள் அமைப்பு தீர்மானம்

எல்லையைப் பாதுகாக்கும்வகையில் வேலி அமைக்கவிருக்கும் இந்தியாவின் முடிவை எதிர்க்கவுள்ளனர் மணிப்பூர் பழங்குடிகள்.
எல்லைப்பகுதியில் மியான்மர் காவலர்கள்
எல்லைப்பகுதியில் மியான்மர் காவலர்கள்

மணிப்பூர் பழங்குடியின அமைப்பு, இந்திய-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கவிருக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளது.

உள்ளூர் பழங்குடியினங்களின் கூட்டு அமைப்பான ஐடிஎல்எஃப், மாவட்ட தலைமையிடத்தில் நடத்திய கூட்டத்தில் மத்திய அரசின் முடிவான இந்thiya-மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் திட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளது.

மேலும், இரு பிராந்திய பகுதிகளில் நடைமுறையில் உள்ள சுதந்திரமாக மக்கள் நடமாடும் அனுமதியை மத்திய அரசு தடை செய்வதையும் ஏற்க மறுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் 16 கிமீ வரை தடையின்றி மற்றைய பிராந்தியத்தில் விசா இல்லாமல் சென்று வர அனுமதி நடைமுறையில் உள்ளது. அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் மியான்மர் நாடு உடன் 1,643 கிமீ எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.

தங்கள் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐடிஎல்எஃப் தெரிவித்துல்ளது.

2021, பிப்ரவரியில் அண்டை நாட்டில் நடந்த ராணுவ கலவரத்தின்போது சின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர் மிசோரம் மற்றும் மணிப்பூரில் தஞ்சம் அடைந்தனர். 

முன்னதாக, நாட்டின் எல்லைகளை வங்க தேசத்திடமிருந்து காக்கும்பொருட்டு இந்திய-மியான்மர் எல்லை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேலி அமைக்கவிருப்பதாக அமித் ஷா குவஹாட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com