கான்பூர் ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு ஆறு நாள்கள் ஆகியுள்ள நிலையில் இந்த கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. 

கோயில் சுவற்றில் வெடிகுண்டு மிரட்டலுடன் கூடிய சுரொட்டிகள் ஒட்டப்பட்டும், தரையில் சிதறிக்கிடப்பதாகவும் பாஜக தலைவரும் ராம் ஜானகி கோயிலின் அறக்கட்டளை உறுப்பினருமான ரோஹித் சாஹு தெரிவித்துள்ளார். ராம் கோயில் திறப்பு விழாவின்போது ராம் ஜானகி கோயிலில் பாவா நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய ரோஹித் சாஹூவின் தம்பி ராகுல் சாஹூ, 'வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த கடிதங்கள் கோயில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தன. கோயிலுக்குள் சில கடிதங்கள் சிதறிக்கிடந்தன. பயத்தில் உடனடியாக கோயில் கதவுகளை மூடிவிட்டேன். காவல்துறையில் இரும்பு சாலைத் தடுப்புகளை வைத்துவிட்டேன்' எனக் கூறியுள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யவிருப்பதாகவும், குற்றவாளிகளை விரைவில்கண்டுபிடிப்போம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com