காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே? அமைச்சரின் யோசனை

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர், காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம் என்று ஒரு யோசனையை அளித்துள்ளார்.
காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே? அமைச்சரின் யோசனை


ஜெய்ப்பூர்: பிப்ரவரி மாதம் வந்தாலே, காதலர் தினக் கொண்டாட்டம் பற்றிய பேச்சு எழுந்துவிடும். இந்த நிலையில்தான், ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர், காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம் என்று ஒரு யோசனையை அளித்துள்ளார்.

அதாவது ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசில் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் மதன் திலாவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிப்ரவரி 14ஆம் தேதியை அனைவரும் தாய்-தந்தையை வணங்கும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அன்றைய தினத்தை தாய்-தந்தையரை வணங்கும் நாளாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு, புதிய கல்வியாண்டுக்கான காலாண்டரில், பிப்ரவரி 14ஆம் தேதியை தாய்-தந்தை வணங்கும் நாள் என்று அச்சிடப்பட வேண்டும் என்றும் கறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், காதலர் தினம் என்பது, நமது நாட்டின் பாரம்பரியம் அல்ல. நமது நாட்டில் அதனைக் கொண்டாடுவதும் சரியல்ல. இந்த நாளை, தாய்-தந்தையை வணங்கும் நாளாக பள்ளிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை சரியாக நடைமுறைப்படுத்த போதிய அவகாசமில்லை என்பதால், அடுத்த ஆண்டு முதல் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com