லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், நாயகனான விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.
‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த, “என்னிடம் பல பேர் பேசுவார்கள். அப்பா, அம்மா குறித்து பேசுவார்கள். பின்னர் கதை குறித்து பேசினால் எப்படியாவது நடக்காமல் போய்விடும். சில நேரங்களில் நம்மிடம் பேசுவது அப்பாவின் மீதுள்ள மரியாதைக்காக பேசுவார்கள். எனது கதையைக் கேட்க யாருக்கும் நம்பிக்கையில்லை. எனது அப்பாவுக்காக மட்டுமே என்னிடம் பேசுவார்கள். ரஜினி மகள் என்பதால் யாருக்கும் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
இதையும் படிக்க: நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுவா?
அப்பாவை சமூக வலைதளங்களில் சங்கி, சங்கி என அழைப்பது தெரிந்தது. அப்பாவை சங்கி எனச் சொல்லும்போது கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் சங்கி கிடையாது. மனிதநேயமிக்க ஒருவர்தான் இதில் நடிக்க முடியும்” என உணர்ச்சிவசமாக பேசினார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினியைக் கண்ட பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யாவின் பேச்சு குறித்து கேள்வியெழுப்பினர். இதற்கு, நடிகர் ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை. அனைத்து மதத்தையும் விரும்பும் ஆன்மீகவாதியான அவர் தந்தையை சங்கி என ஏன் சொல்கிறார்கள் என்கிற அவரின் பார்வையைத்தான் பேசினார். படத்தின் புரோமோஷனுக்காக பேசவில்லை.” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


