ஹிமாசலில் காங்கிரஸின் நிலைப்பாடு சாதகமாக இல்லை: ஜெய்ராம் தாக்குர்

ஹமாசலில் காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் சாதகமாக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்குர் கூறியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹமாசலில் காங்கிரஸின் நிலைப்பாடு மிகவும் சாதகமாக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்குர் கூறியுள்ளார். 

அரசியலில் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் மாநிலத்தில் காங்கிரஸின் நிலை சாதகமாக இல்லை என செய்தியாளர்களின் சந்திப்பில் முன்னாள் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பியதைக் குறிப்பிட்டு தாக்குர், என்டிஏ வலுவடைந்து வருவதையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அனைவரும் நடக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை, இது தொடங்குவதற்கு முன்பே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. ஹமாசலில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியதோடு, மாநிலத்தில் வளர்ச்சி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரவில்லை, மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு என்ன செய்தது என்று மக்கள் அறிய விரும்புவதாகவும் அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com