மத்திய நிதியை விடுவிக்கக் கோரி மம்தா பேரணி: பிப். 2 முதல் தர்னா அறிவிப்பு

மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்களுடன் பேரணி சென்றார்.
மம்தா பேரணி
மம்தா பேரணி

மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்களுடன் பேரணி சென்றார்.

மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 7,000 கோடி நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

மேலும், மேற்கு வங்கத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பிப்.2-ஆம் தேதி முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென கட்சித் தொண்டர்களுடன் 1.5 கிலோ மீட்டர் சாலையில் நடந்து சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மம்தாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்துக்கு அளிக்கப்பட்ட மத்திய நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இது வெறும் தேர்தல் நாடகம்.” என்று விமர்சித்துள்ளார்.

மம்தாவில் அரசியல் வரலாற்றில் ஏற்கெனவே 2006-ஆம் ஆண்டு 25 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டமும், 2019 மற்றும் 2023-ஆம் ஆண்டில் தர்னா போராட்டமும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com