நாட்டில்  நக்சல் வன்முறை குறைந்துள்ளது: குடியரசுத் தலைவர் உரை

நாட்டில் நக்சல் வன்முறைகள் குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 
நாட்டில்  நக்சல் வன்முறை குறைந்துள்ளது: குடியரசுத் தலைவர் உரை

நாட்டில் நக்சல் வன்முறைகள் குறைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டத்திலும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றி வருகிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல்முறையாக உரையாற்றும் குடியரசுத் தலைவர், “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற வாசகத்துடன் உரையைத் தொடங்கினார். அவர் உரையில், 

பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. 80 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்காக ஊக்கமளிக்கத் தனித்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 

பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டது. பழங்குடியினரை அதிகம் பாதிக்கும் சிக்கில்  செல் அனீமியா பாதிப்பை தடுக்க தனித்திட்டம் கொண்டுவரப்படும். 11 கோடி மக்களுக்கு தூய்மையான குழாய் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் குறைந்துள்ளதோடு, நாட்டில்  நக்சல் வன்முறையும் குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவி வருகின்றது. 

திருநங்கைகளுக்கு சமூகத்தில் கௌரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மீன் உற்பத்தியும் இரட்டிப்பாக்கியுள்ளது. லட்சத்தீவுக்கு கடல் வழியே ஆப்டிக்ந பைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நாட்டில் அந்நிய முதலீட்டு அதிகரிப்பதால் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com