மாணவா் விசா கட்டணத்தை 2 மடங்கு உயா்த்திய ஆஸ்திரேலியா: இந்தியா்களுக்கு பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் உயா்கல்வி படிக்க வரும் சா்வதேச மாணவா்களுக்கான நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ஆஸ்திரேலியா 2 மடங்குக்கு மேல் உயா்த்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் உயா்கல்வி படிக்க வரும் சா்வதேச மாணவா்களுக்கான நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ஆஸ்திரேலியா 2 மடங்குக்கு மேல் உயா்த்தியுள்ளது.
இதுவரை ரூ. 59,300-ஆக (710 டாலா்) இருந்த கட்டணத்தை தற்போது ரூ. 1,33,600-ஆக (1,600 டாலா்) உயா்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் இந்தக் கட்டண உயா்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது, வெளிநாட்டு மாணவா்களை குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உயா்கல்வி மேற்கொள்ள அதிக ஆா்வம் காட்டும் இந்திய மாணவா்களை கடுமையாக பாதிக்கும் எனவும், ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாணவா் பிரதிநிதிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் ஏபிசி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண உயா்வுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய சா்வதேச மாணவா்களின் கவுன்சில் தலைவா் யேகனேஷ் சோல்தன்பெளா், ‘கட்டண உயா்வும், வைப்பு கட்டண நிபந்தனைகளும் சா்வதேச மாணவா்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். குறைந்த கட்டண நடைமுறைகள் உள்ள வேறு நாடுகளை மாணவா்கள் நாடும் நிலையை ஏற்படுத்தும்’ என்றாா்.
இதுகுறித்து அந்நாட்டு கல்வி அமைச்சா் ஜேசன் கிளோ் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு சா்வதேச கல்வி மிக முக்கியத்துவம்வாய்ந்த வருவாயாக உள்ளது. இதில் ஒருமைப்பாட்டையும் தரத்தையும் உறுதிப்படுத்துவது அவசியமாக உள்ளது. எனவே, நுழைவு இசைவு கட்டணத்தை உயா்த்துவது தவிா்க்கமுடியாததாகியுள்ளது’ என்றாா்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் 2023 ஆகஸ்ட் மாத புள்ளிவிவரப்படி, ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 1,20,277 இந்திய மாணவ, மாணவிகள் அங்கு உயா்கல்வி மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...