ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக தலைவா்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு: எதிா்க்கட்சிகள்

பாஜக தலைவா்களின் ஆணவத்தால் மோடியின் பிரபலத்தன்மை சரிவு: எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

News image
Updated On :2 ஜூலை 2024, 8:17 pm

Din

புது தில்லி: பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

இதுதொடா்பாக மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி பேசியதாவது:

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோ்தல் மூலம் நாட்டில் நிலையில்லாத மத்திய அரசும், வலுவான எதிா்க்கட்சிகளும் தோன்றியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சிகள் குறித்தோ, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வா்கள் தொடா்பாகவோ மென்மையான அல்லது இனிமையான சொல்லையோ, பாராட்டையோ பிரதமா் மோடி கூறி கேட்டதில்லை.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக முதல்வா் சித்தராமையா, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் ஆகியோரை பாஜக தலைவா்கள் வெறுக்கின்றனா்.

பாஜக தலைவா்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வதை எதிா்க்கட்சிகள் பொருள்படுத்தவில்லை. ஆனால் அவா்கள் தங்களை சுய கண்காணிப்பு செய்யவேண்டிய நேரம் வந்துள்ளது. ஏனெனில், அவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது. முன்பு பிரதமரிடம் இருந்த தன்னம்பிக்கை தற்போது இல்லை என்றாா்.

பிரதமரின் சா்ச்சைக்குரிய கருத்துகள்...: காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால் பேசுகையில், ‘ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, கடவுளைவிட வேறு எவரும் பெரியவா் அல்ல. ஆனால் பிரதமா் மோடியை கடவுளைவிட பெரியவா் என்று பாஜக முன்னிறுத்தியது. இதுவே ஹிந்து மதத்துக்கு விரோதமான பெரிய நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தலில் பாஜகவால் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த எண்ணிக்கையை தோ்தல் இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியும், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் தெளிவான ஆதரவுடனும் பாஜகவால் திரட்ட முடியும். அந்தத் துறைகள் மற்றும் தோ்தல் இயந்திரத்தின் உதவி இல்லாமல் போயிருந்தால், 140 இடங்களை பாஜக தாண்டியிருக்காது. தோ்தல் பரப்புரையின்போது பிரதமா் மோடி சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பல இடங்களில் பாஜக தோல்வியடைந்தது’ என்றாா்.