தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரைக்கு இரண்டு நாள்கள் விடுமுறை: ஒடிஸா முதல்வா் அறிவிப்பு

புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரைக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 9:25 pm

Din

புவனேசுவரம்: ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ரத யாத்திரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, இரு நாள்கள் விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ செவ்வாய்க்கிழமை அறித்தாா்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த யாத்திரைக்கான பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மோகன் சரண் மாஜீ தலைமையில் நடைபெற்றது. அப்போது, 1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சடங்குகளே மீண்டும் பின்பற்றப்படுவதால் இந்த யாத்திரை சிறப்பு வாயந்ததாக அமையவுள்ளது என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

இந்த முறை புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த யாத்திரையை நடத்துவதை ஆசிா்வாதமாக கருதுகிறேன். இரு நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரையின்போது பொது விடுமுறை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், யாத்திரையை சிறப்பாக நடத்தி புரி மற்றும் ஒடிஸாவின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்.

ஜூலை 7- ஆம் தேதி தோ் இழுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக முந்தைய நாள் மாலை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒடிஸாவுக்கு வருகிறாா் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒடிஸா மாநில துணை முதல்வா்கள் கே.வி.சிங் தியோ, பிரவதி பாரிடா மற்றும் அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.