
ஆளும் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அரசியலமைப்புக்கு எதிரானது என்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். அதன்பின்னர் அவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இதன்பிறகு மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களுடன் பேசினார்.
அவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, பிரதமர் மோடி தவறான தகவல்களையும், உண்மைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அளித்து வருகிறார்.
மேலும், அம்பேத்கர் மற்றும் நேருவின் உருவ பொம்மையை பாஜகவின் எரித்தனர். ஆனால் அம்பேத்கரை நாங்கள் அவமரியாதை செய்தோம் என மோடி அவையில் பேசியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து நிராகரித்த ஆர்எஸ்எஸ் இப்போது அதைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் யார் செயல்படுகின்றனர் என்பதை மக்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆரம்பத்தில் இருந்தே அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் எதிரானவர்கள்.
பொய் பேசுவதும், மக்களைத் தவறாக வழிநடத்துவதும், உண்மைக்கு எதிராகப் பேசுவதும் மோடியின் வழக்கம். காங்கிரஸை குறிவைத்து பிரதமர் சில தவறான கருத்துக்களை தெரிவித்தார். தங்களை அவையில் பேச அனுமதிக்காது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவரை அவையில் பேச அனுமதிக்காததால் இந்தியா கூட்டணி வெளிநடபுப் செய்ததாகவும் அவர் கூறினார்.