
பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான கே.கேசவ ராவ் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை மீண்டும் இணைந்தாா்.
தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் யெலா் கே.சி.வேணுகோபால், தெலங்கானா காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் தீபா தாஸ்முன்ஷி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸில் கேசவ ராவ் இணைந்தாா்.
இதுகுறிதது தனகு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட காா்கே, ‘மூத்த தலைவா் கே.கேசவ ராவை காங்கிரஸ் கட்சிக்கு வரவேற்கிறோம். அவருடைய வருகை மதிப்புமிக்கது. பொதுச் சேவையில் அவருடைய நீண்டகால அனுபவம் காங்கிரஸ் கட்சியை தெலங்கானாவில் மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.
தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கேசவ ராவ், தற்போது பாரத ராஷ்டிர சமிதி கட்சியாக மாறியுள்ள தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியில் கடந்த 2013-இல் இணைந்தாா். தற்போது காங்கிரஸுக்கு மீண்டும் திரும்பியுளளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





