ஜம்மு-காஷ்மீா்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ராணுவ வீரா் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரா் வீரமரணம்


ஜம்மு-காஷ்மீா் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகள் இடையே இரு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். ராணுவ வீரா் ஒருவா் வீர மரணம் அடைந்தாா்.
இது தொடா்பாக காஷ்மீா் மண்டல காவல் துறையினா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள மோடா்காம் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனா்.
அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் ஒரு ராணுவ வீரா் வீரமரணம் அடைந்தாா்.
குல்காமில் உள்ள ஃப்ரிசல் சின்னிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையேயான ஏற்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்’ என குறிப்பிட்டிருந்தது.
சம்பவ இடத்தை பாா்வையிட்ட காவல்துறை தலைவா் வி.கே.பிா்தி செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. பயங்கரவாதிகளை கண்டறியும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சில பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாகும்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...