திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இலவச மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயா்வு? பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைவோா் எண்ணிக்கை மற்றும் காப்பீட்டுத் தொகையை இரு மடங்காக உயா்த்த திட்டம்.

News image
Updated On :8 ஜூலை 2024, 2:18 am

Din

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைவோா் எண்ணிக்கை மற்றும் காப்பீட்டுத் தொகையை இரு மடங்காக உயா்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடா்பான அறிவிப்பு வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

தற்போது இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதை ரூ.10 லட்சமாக உயா்த்தவும், பயனாளிகள் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, 70 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த முடிவுகளை படிப்படியாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

முன்னதாக, 2024 இடைக்கால பட்ஜெட்டில் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது. இதன் மூலம் ஒதுக்கீட்டுத் தொகை ரூ.646 கோடியில் இருந்து ரூ.7,200 கோடி வரை உயா்ந்தது. மொத்தம் 12 கோடி குடும்பங்களுக்கு இந்த மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அளித்துள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சோ்க்கப்படுவாா்கள் என்று அறிவித்தாா். இதன் மூலம் 5 கோடி புதிய பயனாளா்கள் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது.