டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பயங்கரவாத தாக்குதல்; இரண்டு வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்

News image
Updated On :7 ஜூலை 2024, 4:59 am

DIN

பயங்கரவாதிகள் அதிகாலையில் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் மஞ்சாகோட் பகுதியில் உள்ள கலுதி கிராமத்தில், ராணுவ வீரர்களின் முகாம்களின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சுமார் அரைமணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதிகள் அருகிலுள்ள காட்டிற்குள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

நேற்று (ஜூலை 06) தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்காம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த பயங்கரவாதிகளின் அமைப்பு, தற்போது பாதுகாப்புப் படையினரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.