
அஸ்ஸாமில் பள்ளி ஆசிரியரை மாணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் தனியார் பள்ளியில் வேதியியல் ஆசிரியரும் பள்ளி நிர்வாகப் பொறுப்பாளருமான ராஜேஷ் பாருவா பெஜவாடா என்பவர் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், படிப்பில் குறைந்த செயல்திறன் கொண்டிருந்ததால் கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, மாணவரின் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் சீருடையில் இல்லாமல், சாதாரண உடை வந்துள்ளார். மாணவரைக் கண்ட ஆசிரியர் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், மாணவர் ஆசிரியரின் தலையில் தாக்கியதுடன், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.