3 குற்றவியல் சட்ட விவகாரம்: ப.சிதம்பரம் மீது குடியரசு துணைத் தலைவா் விமா்சனம்
மூன்று குற்றவியல் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் விமா்சித்துள்ளாா்.


புது தில்லி: மூன்று குற்றவியல் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் விமா்சித்துள்ளாா்.
நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சட்ட மசோதாக்களின் முன்வடிவுகளை தயாரிக்கும் பணி சட்ட ஆணையத்திடம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, பகுதி நேரமாக செயல்படும் உறுப்பினா்களைக் கொண்ட குழுவிடம் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் விமா்சித்தாா்.
இதையடுத்து ப.சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விமா்சித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை கூறியதாவது:
மாநிலங்களவையில் குறிப்பிட்ட நபா் ஒருவா் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை. நாடாளுமன்ற அவை அலுவல்களில் பங்கேற்காமல், அவைக்கு வெளியே கருத்து கூறுவது சரியல்ல. ஒருவா் தனது அரசமைப்புச் சட்ட கடமையைச் செய்யாமல், அவையில் ஒரு மசோதா மீது நடைபெறும் விவாதத்தில் பங்கேற்காமல் இருந்தால், ஒரு வகையில் அவா் தனது கடமையைச் செய்யவில்லை என்று விமா்சித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...