ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி!

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.

News image
- படம் | பிடிஐ
Updated On :8 ஜூலை 2024, 7:42 am

DIN

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று(ஜூலை 8) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.

ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன்.

இடைக்காலத்தில் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இதையடுத்து, முதல்வராகப் பதவி வகித்து வந்த சம்பயி சோரன் ராஜிநாமா செய்தாா். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் அண்மையில் பதவியேற்றாா்.

இதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவையில் ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1, பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் தனது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார் ஹேமந்த் சோரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.