மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
மணிப்பூரில் உடமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை தாமதமின்றி பெற மக்களவையில் குரல் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து தலைநகர் இம்பாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது, வன்முறையும் வெறுப்பும் எதற்கும் தீர்வாகாது. அன்பும் சகோதரத்துவமுமே தீர்வாக இருக்கும்.
மணிப்பூரில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிரதமர் மணிப்பூருக்கு வருகை தந்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என நாடு விரும்புகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வர வேண்டியது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். இங்கு வந்து மக்களின் குரலைக் கேட்டு அவர்களின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒருங்கிணைந்த நிலங்களின் தொகுப்பான இந்தியாவில் மணிப்பூர் பெருமை மிகுந்த மாநிலம். மணிப்பூரில் பிரச்னை ஏற்படவில்லையென்றாலும் பிரதமர் இங்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், மணிப்பூரில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு வந்து ஓரிரு நாள்கள் தங்கி மக்களின் குரலைக் கேட்க வேண்டும். இது மணிப்பூர் மக்களை சற்று ஆசுவாசப்படுத்தும்.
மணிப்பூர் சூழலை மேம்படுத்த, மீண்டும் அமைதியை நிலைநாட்ட எந்த உதவியையும் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆளுநரை சந்தித்துப் பேசினோம். மணிப்பூருக்குத் தேவையான உதவிகளை செய்ய காங்கிரஸ் தயாராக உள்ளதை அவரிடம் குறிப்பிட்டோம்.
இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எதுவும் மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதையும் அவரிடம் கூறினோம். மேலும் பேசி, இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அது எங்களுடைய நோக்கமும் கிடையாது எனக் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய அரசியல் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ராகுல் காந்தி, நான் கூறியதற்கு மதிப்பு கொடுங்கள். மணிப்பூர் பிரச்னையை திசைதிருப்பும் எந்தவொரு கேள்விகளுக்கு நான் தற்போது பதிலளிக்கத் தயாராக இல்லை. இங்கு நான் வந்தது மணிப்பூர் பிரச்னையை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே. இதனை திசைதிருப்ப வேண்டாம். மணிப்பூர் இந்தியாவில் உள்ள அழகான மாநிலங்களில் ஒன்று எனக் கூறி எழுந்து சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!
பினராயி விஜயனை கட்டுப்படுத்தும் பிரதமர் மோடி: ராகுல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



