ராகுல் காந்தியை வழிநெடுக நின்று வரவேற்ற மணிப்பூர் பெண்கள்!

மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு 3வது முறையாக ராகுல் காந்தி, மணிப்பூர் செல்கிறார்.
மணிப்பூரில் பள்ளியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்த ராகுல் காந்தி
மணிப்பூரில் பள்ளியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்த ராகுல் காந்தி

மணிப்பூர் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியை, பெண்கள் மற்றும் இளைஞர்கள் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு, மணிப்பூர் மாநிலம் சுரசந்பூர் மாவட்டத்துக்கு சென்ற ராகுல் காந்திக்கு பெண்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. மைதேயி - குகி ஆகிய இருதரப்பு மக்களிடையே நீடித்துவரும் வன்முறைக்கு நிலையான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

மணிப்பூர் சம்பவம் குறித்து மக்களவையில் இந்தியா கூட்டணியினர் குரல் எழுப்பி வருகின்றனர். எனினும், மணிப்பூர் கலவரம் குறித்து இறுதியான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

கலவரத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிவதற்காக ராகுல் காந்தி மணிப்பூர் சென்றுள்ளார்.

முன்னதாக அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மேலும், மக்களவையில் குரல் எழுப்பி அசாம் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சென்ற அவருக்கு, ரசந்பூர் மாவட்டத்தில் வழிநெடுக நின்று மணிப்பூர் பெண்கள் ராகுல் காந்தியை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்த பிறகு, 14 மாதங்களில் மூன்றாவது முறையாக ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை வெடித்த மணிப்பூருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குச் சென்ற ராகுல், தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்போதும் மணிப்பூர் சென்றிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com