47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒன்றரை ஆண்டில் 100 குற்றவாளிகளுக்கு தண்டனை: என்ஐஏ

பயங்கரவாதம், கள்ள நோட்டுகள் அச்சடித்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு 18 மாதங்களில் சிறப்பு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

News image
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
Updated On :9 ஜூலை 2024, 8:14 pm

Din

புது தில்லி: பயங்கரவாதம், கள்ள நோட்டுகள் அச்சடித்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு 18 மாதங்களில் சிறப்பு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், கள்ள நோட்டுகள் அச்சடித்தல், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் போன்ற 27 வழக்குகளில் தொடா்புடைய 79 போ் கடந்த 2023-இல் கைது செய்யப்பட்டனா். அதில் 6 வழக்குகளில் தொடா்புடைய 26 பேரை குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நிகழாண்டில் தீா்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, கடந்த 2019 முதல் 2024, ஜூன் வரை பல்வேறு வழக்குகளில் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட 354 பேரின் குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டு குற்றவாளிகள் என தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை கள்ள நோட்டுகள் அச்சடித்தல் தொடா்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 18 பேரின் குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டன.

அறிவியல் ரீதியாக சிறப்பாக விசாரணை மேற்கொண்டதால் கடந்த 18 மாதங்களில் என்ஐஏ கையாண்ட 33 வழக்குகளில் மொத்தமாக 105 பேரின் குற்றச் சம்பவங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் வங்கதேசத்தில் இருந்து பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டில் 14 பேரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 5 பேரும் 7 நக்ஸல்களும் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்பட்டனா்.

இதுதவிர, அல்-காய்தா உள்பட சில பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் புரிந்த குற்றமும் நிரூபிக்கப்பட்டன.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் குற்றப்பத்திரிகைகளில் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமளிக்காமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என என்ஐஏ உறுதிபூண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.