கனமழை: போக்குவரத்து நெரிசலில் தில்லி!

தில்லியில் கனமழை: அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
மழையால் சாலையில் தேங்கிய நீரில் பயணிக்கும் வாகனோட்டிகள்
மழையால் சாலையில் தேங்கிய நீரில் பயணிக்கும் வாகனோட்டிகள்பிடிஐ

கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவிவந்த நிலையில் தில்லியின் அநேக இடங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்துள்ளது. அதனால் சாலைகளில் தேங்கிய நீரால் வாகனோட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.

மூன்றிலிருந்து நான்கு மரங்கள் விழுந்ததாகவும் நீர் தேங்கியிருப்பதாகவும் தில்லி பொதுபணித் துறைக்கு இதுவரை 22 அழைப்புகள் வந்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

நொய்டா, காஸியாபாத் உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதியிலும் (என்சிஆர்) மழைப்பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அசாத் சந்தை சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அசாத் சந்தை முதல் சாஸ்திரி நகர் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் உள்பட ஆறு பேர் பலியான இடைவிடாத மழைக்கு பிறகு புதிய மழை இன்று தொடங்கியுள்ளது.

ஜூன் 28-ம் தேதி தில்லி கடுமையான மழையை எதிர்கொண்டது. 88 ஆண்டுகளாக இல்லாதளவு மழை கொட்டித் தீர்த்தது.

தில்லியில் அநேக இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புவாசிகள் மின்சாரம் மற்றும் குடிநீர் பெற முடியாமல் தவித்தனர். தில்லி விமான நிலையத்தில் முனைமம் ஒன்றில் விபத்து ஏற்படவும் அதனால் ஒருவர் உயிரிழக்கவும் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com