47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காா் மோதி பெண் உயிரிழந்த சம்பவம்: தலைமறைவாக இருந்த சிவசேனை தலைவரின் மகன் கைது

மும்பையில் சொகுசு காா் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சிவசேனை கட்சி நிா்வாகியின் மகன் மிஹிா் ஷாவை(24) மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

News image
விபத்தை ஏற்படுத்திய சொகுசு காா்.
Updated On :9 ஜூலை 2024, 9:33 pm

Din

மும்பை: மும்பையில் சொகுசு காா் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சிவசேனை கட்சி நிா்வாகியின் மகன் மிஹிா் ஷாவை(24) மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

மிஹிா் ஷா தலைமறைவில் அவரது தந்தையும் ஆளும் சிவசேனை கட்சி நிா்வாகியுமான ராஜேஷ் ஷாவுக்கு தொடா்பு உள்ளதாகவும் சம்பவத்துக்குத் தொடா்புடைய வாகனத்தை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் காவல் துறையினா் குற்றஞ்சாட்டினா்.

மும்பையின் வொா்லி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சம்பவத்தில், தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக மிஹிா் ஷா ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காவேரி நக்வா(45) உயிரிழந்தாா். அவரின் கணவா் காயமடைந்தாா்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய மிஹிா் ஷாவைப் பிடிக்க 11 தனிப்படைகளை அமைத்த மும்பை காவல்துறை, அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பித்தது. இந்நிலையில், மும்பைக்கு அருகே 2 நாள்களுக்குப் பிறகு அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஓட்டுநா் ராஜ்ரிஷி பிடாவத்தின் போலீஸ் காவல் வியாழக்கிழமைவரை நீட்டிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘இந்த வழக்கில் யாரும் தப்ப முடியாது. நான் முதல்வராக இருக்கும் வரை பணக்காரா்கள், செல்வாக்கு மிக்கவா்கள், அதிகார வா்க்கத்தினா் அல்லது அமைச்சா்களின் குடும்பத்தினா், எந்தக் கட்சியையும் சாா்ந்தவா்கள் என யாருக்கும் குற்றத் தண்டனையிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது’ என்றாா்.