7.5 கிலோ.. கால்பந்தைவிட பெரிய புற்றுநோய் கட்டி: அறுவை சிகிச்சையில் நீக்கிய மருத்துவர்கள்!

வயிற்றில் 7.5 கிலோ புற்றுநோய் கட்டி நீக்கம்: 58 வயது நபரின் அதிர்ச்சி அனுபவம்!
மாதிரி படம்
மாதிரி படம்
Published on
Updated on
1 min read

7.5 கிலோகிராம் எடை கொண்டிருந்த 32 செமீ அளவுள்ள புற்றுநோய் கட்டியை 58 வயது மனிதரின் வயிற்றிலிருந்து நீக்கிய சம்பவம் புது தில்லியில் நடந்துள்ளது.

தில்லியை சேர்ந்த மனிதர் இரு வாரங்களுக்கு முன்பாக வயிற்றில் கனமாக மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது போல உணர்ந்துள்ளார். அதற்கு முன்னர் வயிற்றில் எந்தவித பிரச்னையும் இல்லாது இருந்துள்ளார். உடல் எடை குறைவோ, சீரண கோளாறோ பலவீனமோ ஏற்படவில்லை.

சர் கங்காராம் மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதித்தபோது வயிற்றின் வலது பக்கத்தில் மிகப்பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளனர். பிரதானமாக கொழுப்பு மற்றும் சிறியளவிலான மெலிதான தசை திசுக்களால் உருவான கட்டி கல்லீரல் மற்றும் சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவற்றின் இடத்தை மாற்றியமைத்து பெரிதாக வளர்ந்துள்ளது.

வயிற்றின் அமைப்பையே மாற்றிய நிலையில், வீரியம் மிக்க புற்றுநோய்களில் ஒன்றான ரெட்ரோபெரிட்டோனியல் லிபோசர்கோமா என்கிற நோயினால் இந்த கட்டி உருவானதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரமளவுக்கு நீடித்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்து 7 நாள்களுக்கு பிறகு நோயாளி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் இயல்பாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com