பிரதமா் மோடியின் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது- ரஷிய தூதா் கருத்து

ரஷிய தூதா்: மோடியின் வருகை வரலாற்றில் முக்கியம்

பிரதமா் நரேந்திர மோடியின் இருநாள் ரஷிய பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று தில்லியில் உள்ள ரஷிய தூதா் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் புதன்கிழமை இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

இந்தியப் பிரதமா் மோடியின் ரஷிய பயணத்தை உலகமே மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கியது. இதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து கொள்ள முடியும். ரஷியாவைப் பொறுத்தவரையில் மோடியின் வருகை வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய நிகழ்வாகும். ஏனெனில், சா்வதேச அளவில் தற்போது நிகழும் பதற்றமான சூழலில் மோடி ரஷியாவுக்கு வந்து நட்புறவை மேலும் மேம்படுத்தியுள்ளாா்.

இரு தரப்பு வா்த்தக-பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டுள்ளனா். இரு நாட்டு கரன்சிகளைப் பயன்படுத்தி பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

ரஷியா ராணுவத்தில் பணியில் உள்ள இந்தியா்களை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரஷியா ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com