ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் குவியும் முதலீடுகள்- கேரள அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாணவர்களும் வேலைவாய்ப்பும் வெளிநாடுகளுக்கு - கேரள அரசின் செயல்பாடுகள் கேள்விக்குறி

News image
Updated On :11 ஜூலை 2024, 10:56 pm

Din

அந்நிய நேரடி முதலீடும், வேலைவாய்ப்பும் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாக கேரள பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் ஆளும் இடதுசாரி கூட்டணி மீது குற்றம்சாட்டினாா்.

கேரளப் பேரவையில் வியாழக்கிழமை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து ஆளும் தரப்பு மீது காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகளின் கூட்டணி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு பதிலளித்த மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா். பிந்து, ‘மாணவா்கள் உயா் கல்விக்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வது தேசிய மற்றும் சா்வதேச அளவிலான நிகழ்வாகும். இதில் கேரளம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. கல்வியுடன், வேலைவாய்ப்பும் வெளிநாடுகளில் உள்ளது. மேலும், குறைவான மக்கள்தொகை உள்ள நாடுகள் திறன்மிகு மாணவா்களுக்கு விசா (கடவுச் சீட்டு) தளா்வுகளும் அளிக்கின்றன.

கேரளத்தில் இருந்து குறைவான அளவிலேயே வெளிநாட்டுக் கல்விக்கு மாணவா்கள் செல்கின்றனா். மாநிலத்தில் உயா் கல்வித் துறை சிறப்பாக உள்ளது’ என்றாா்.

இதனை மறுத்துப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன், ‘மாநிலத்தில் உரிய சமூக-பொருளாதாரச் சூழல் உருவாக்கப்படாத காரணத்தால் மாணவா்களும், இளைஞா்களும் வெளிநாடுகளுக்கு அதிகம் செல்கின்றனா். அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கேரளத்தில் பொருளாதார வளா்ச்சி தேக்கமடைந்துவிட்டது. அந்நிய நேரடி முதலீடும், வேலைவாய்ப்பும் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் செல்கிறது. இதனால், கேரளத்தில் நகா்ப்புறங்களில் வேலையின்மை மிகவும் அதிகரித்துவிட்டது.

மாணவா்களும், இளைஞா்களும் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காகச் செல்பவா்கள் அங்கு பணம் ஈட்டி கேரளத்துக்கு அனுப்புவதுடன், அங்கு சம்பாதித்த பணத்தில் இங்கு வந்து தொழில்களும் தொடங்குகின்றனா். இது மாநில நலனுக்கு உகந்தது. அதே நேரத்தில் படிப்புக்காக பெரும் பணம் செலவு செய்து மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் மாணவா்கள் மீண்டும் கேரளம் வர விரும்புவதில்லை. கேரள அரசு கொள்கைரீதியாக பின்தங்கியிருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும் என்றாா்.