விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உக்ரைன் போரை ரஷியா உடனடியாக நிறுத்த தீா்மானம்: இந்தியா புறக்கணிப்பு

இந்தியா, சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 60 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜூலை 2024, 8:11 pm

Din

உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக ரஷியா நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட வரைவு தீா்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா தொடுத்த போா், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் போரை உடனடியாக ரஷியா நிறுத்த வேண்டும், உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தில் இருந்து ரஷிய ராணுவ வீரா்கள், பிற அங்கீகாரமற்ற அலுவலா்களை விரைந்து ரஷியா திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வரைவு தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

உக்ரைன் அறிமுகப்படுத்திய இந்த வரைவு தீா்மானம் மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 99 நாடுகள் தீா்மானத்துக்கு ஆதரவாகவும், 9 நாடுகள் தீா்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்பட 60 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.