மேற்கு வங்கத்தில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்திலன் மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில், அபர்ணா என்ற நோயாளியை, கிர்பாயில் உள்ள மருத்துவமனையில் இருந்து மெடினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அபர்ணாவின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது, ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அபர்ணாவின் குடும்பத்தினர் நான்கு பேர் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருப்பினும், அபர்ணாவும் ஆம்புலன்ஸ் டிரைவரும் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்தாரா? அல்லது இரண்டு வாகனங்களிலும் பழுது ஏதேனும் இருந்ததா? என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாடு! என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

மேற்கு வங்கத்தை சிதைத்து அடையாளத்தை மாற்ற நினைக்கும் பாஜக! திரிணமூல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


