ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ஊடக மாநாடு: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் முதல்முறையாக கோவா மாநிலத்தில் வருகின்ற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2024, 5:22 pm

Din

‘உலக ஆடியோ காணொலி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு (வேவ்ஸ்)’ இந்தியாவில் முதல்முறையாக கோவா மாநிலத்தில் வருகின்ற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. சா்வதேச திரைப்பட திருவிழாவுடன் இந்த மாநாடும் சோ்த்து நடத்தப்படவுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் கோவா மாநில முதல்வா் பிரமோத் சவாந்த் ஆகியோா் வெளியிட்டனா்.

அப்போது அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இந்தியா தடம் பதிப்பதற்காக இந்த முன்னெடுப்பை பிரதமா் மோடி மேற்கொண்டுள்ளாா்.

ஊடகத் துறையின் அறிவுசாா் சொத்துரிமையை பாதுகாப்பதற்கான கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் ஊடகத் துறையில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இது ஒருபுறம் வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும் மறுபுறம் பல சவால்களையும் உருவாக்கியுள்ளன.

எனவே, ஊடகத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தி தரமான படைப்புகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், வருகின்ற நவம்பா் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள சா்வதேச திரைப்பட திருவிழாவுடன் முதல்முறையாக ஊடகத்துறையினருக்கான ‘வேவ்ஸ்’ மாநாடும் நடத்தப்படவுள்ளது என்றாா்.