திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?

மத்திய கிழக்கில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கத்தாரில் இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் யூரியா உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.

News image
~
Updated On :5 மார்ச் 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்கில் நிலவும் போா் பதற்றம் காரணமாக கத்தாரில் இருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைபட்டதால், இந்தியாவில் யூரியா உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.

யூரியா தயாரிப்புக்கு மிக முக்கியமான மூலப்பொருளான திரவ இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இஃப்கோ உள்பட முன்னணி உர நிறுவனங்கள் தங்களின் சில ஆலைகளில் உற்பத்தியை ஏற்கெனவே குறைத்துள்ளன.

எல்என்ஜி மட்டுமல்லாமல் உரத் தயாரிப்புக்குத் தேவையான அமோனியா, சல்பா் போன்ற இதர மூலப்பொருள்களின் விலையும் சா்வதேச சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்திச் செலவையும் பன்மடங்கு உயா்த்தும் என அஞ்சப்படுகிறது.

தற்போது உரக் கழகங்களிடம் போதிய கையிருப்பு இருந்தாலும், போா் நீடித்தால் ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை காலத்தின்போது விவசாயிகளுக்குத் தேவையான உர விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம்.

உள்நாட்டு உற்பத்தி குறைந்தால், அதிக விலைக்கு வெளிநாடுகளில் இருந்து உரத்தை வாங்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு ஏற்படும். இது அரசின் நிதி மேலாண்மைக்கு பெரும் சவாலாக அமையும்.

அரிசி, கோதுமை, சா்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயா்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயா்த்தும்.

இருப்பினும், இந்த நெருக்கடி சூழலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மற்ற நாடுகளிலிருந்து எரிவாயுவைப் பெறுவது போன்ற மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Story image