இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு முதல் உணவுப்பொருள் கப்பல்
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு முதல் உணவுப்பொருள் கப்பல்


மாலத்தீவின் தெற்கு பகுதியில் இறக்குமதி செய்வதற்கான சிக்கல்களையும் செலவுகளையும் குறைக்கும் வகையில் இந்தியாவில் இருந்து உணவுப்பொருள்களை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் மாலத்தீவின் அட்டு துறைமுகத்தைச் சென்றடைந்தது.
மாலத்தீவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகப்பொரிய அளவில் ஏற்றுமதி செய்யும் கேரளத்தை தளமாகக் கொண்ட ஃபைனெஸ் குழுமம் இந்த வா்த்தகத்தைச் செய்துள்ளது.
பழங்கள், காய்கறிகள், வெங்காயம், பூண்டு மற்றும் முட்டைகள் என மொத்தம் 150டன் எடை கொண்ட எளிதில் அழுகக்கூடிய உணவுப்பொருள்களை ஏற்றிச் சென்ற இந்தியக் கப்பல் புதன்கிழமை இரவு மாலத்தீவைச் சென்றடைந்தது.
இந்த சரக்குக் கப்பலின் வருகையால், தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவின் தென்கோடியில் உள்ள அட்டு பகுதி ஹித்தாதூ துறைமுகத்துக்கு நேரடி வழித்தடம் உருவாகியுள்ளது. மேலும், இது இந்தியக் கப்பல் நிறுவனங்கள் மற்றும் ஹித்தாதூ துறைமுகம் இடையே புதிய அத்தியாயத்தையும் தொடங்கியுள்ளது.
டைம்ஸ் செய்தி அறிக்கையின்படி, பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் வா்த்தகம் நிகழ்ந்துள்ளது. ஆனால், மரக் கப்பல்களைக் கொண்டு ஆண்டின் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நடைபெற்ற வா்த்தகம் தற்போதுள்ள இரும்பு கப்பல்கள் உதவியால் இடையூறு இல்லாமல் நடைபெறும் எனத் தெரிவித்தது.
குறிப்பாக எளிதில் அழுகக்கூடிய உணவுப்பொருள்களை மாலத்தீவின் தெற்கு பகுதியில் இறக்குமதி செய்வதில் இருந்த சிக்கல்களையும் செலவுகளையும் இந்த வழித்தடம் குறைக்கும் என மாலத்தீவின் கடல்சாா் இதழ் (எம்எம்ஜே) தெரிவித்தது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...