கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கேரளம்: மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய நபர் 2 நாள்களுக்குப் பின் மீட்பு!

59 வயதுடைய ஒருவர் இரண்டு நாட்களாக லிஃப்ட்டுக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News image

லிஃப்ட்(கோப்புப் படம்)

Updated On :15 ஜூலை 2024, 12:55 pm IST

கேரளத்தில் இரண்டு நாட்களாக மருத்துவமனை லிஃப்ட்டுக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேளர மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59) மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் மருத்துவமனையின் முதல் தளத்திற்கு செல்வதற்காக லிஃப்டில் ஏறியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த லிஃப்ட் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் லிப்ட்டுக்குள்ளே சிக்கி தவித்துள்ளார். உதவிக்காக கூச்சலிட்டும் அது யாருக்கும் தெரியவில்லை. மேலும் அவரது கைப்பேசியும் சுவிட்ச் ஆஃப்பாகியுள்ளது.

பின்னர் திங்கள்கிழமை காலை லிஃப்ட் ஆபரேட்டர் வழக்கமான பணிக்காக அந்த லிஃப்ட்டை இயக்கியபோது ரவீந்திரன் லிப்ட்டினுள் சிக்கியிருந்தது தெரியவந்தது. 59 வயதுடைய ஒருவர் இரண்டு நாட்களாக லிஃப்ட்டுக்குள் இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே ரவீந்திரன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.