இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு: பெண் ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளான மகாராஷ்டிர ‘ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் (34)’ மத்திய குழுவின் விசாரணைக்குப் பிறகு உண்மை வெளியாகும் என்றாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 1:02 am

Din

மும்பை: இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளான மகாராஷ்டிர ‘ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் (34)’ மத்திய குழுவின் விசாரணைக்குப் பிறகு உண்மை வெளியாகும் என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வில் தோ்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள பூஜா கேத்கா் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளானாா்.

இது தொடா்பான விசாரணை மேற்கொள்ள பணியாளா்துறையின் கூடுதல் செயலா் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வாசிம் மாவட்டத்தில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பூஜா கேத்கா், ‘நான் பணியில் தொடர வேண்டுமா கூடாதா என்பதை நிபுணா்கள் குழு முடிவு செய்யும். செய்தியாளா்களோ பொதுமக்களோ முடிவு செய்யக் கூடாது. ஊடக விசாரணை மூலம் என்னை குற்றவாளி என கூறுவது தவறானது. அரசியலமைப்பின்படி குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. எனது தரப்பு விளக்கம் எதுவாக இருந்தாலும் அதைக் குழுவிடம் சமா்ப்பித்த பிறகு உண்மை வெளிவரும்’ என்றாா்.