வாலுடன் பிறந்த குழந்தை! உலகில் 41வது அறுவை சிகிச்சை!

தெலங்கானாவில் வால் உடன் பிறந்த குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
குழந்தை, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு / பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனை
குழந்தை, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு / பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனை
Published on
Updated on
1 min read

தெலங்கானாவில் வால் உடன் பிறந்த குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

3 மாத குழந்தையின் வாலை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக எய்ம்ஸ் மருத்துவர்கள் நீக்கினர்.

தெலங்கானா மாநிலம் பிபிநகரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த ஜனவரி மாதம் இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தைகள் நல மருத்துவ அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள் குழு, வாலுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அறுவை சிகிச்சையானது குழந்தையின் உள்ளுறுப்புகளின் (மூளை, இதயம், குடல், நுரையீரல்) வளர்ச்சியை பாதிக்கவில்லை என்றால் மட்டுமே இது வெற்றிகரமான அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், கடந்த 6 மாதங்களாக குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

தற்போது, இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சஷாங்க் பாண்டா கூறியதாவது, இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் உலகில் இதுவரை 40 முறை மட்டுமே வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன. கடைசியாக சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிபிநகர் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை உலகின் 41வது வெற்றிகரமான அறுவை சிகிச்சையாகியுள்ளது என்றார்.

வால் உடன் பிறந்த குழந்தை ஓக்குலட் முதுகெலும்பு டிஸ்ராபிசத்தால் (ஓ.எஸ்.டி.) பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவத் துறையில் ஓக்குலட் என்பதை கண்ணுக்கு புலப்படாத வளர்ச்சி எனலாம். முதுகெலும்பு அல்லது தண்டுவடத்தில் இயல்புக்கு மாறான உருவாக்கம் மறைந்தோ அல்லது உடனடியாகத் தெரியாமலோ இருக்கும் (தோல் மீது தெரியாமல் இருக்கும்) நிலையே ஓக்குலட் எனப்படுகிறது.

முதுகெலும்பு டிஸ்ராபிசம்

இயல்புக்கு மாறாக அசாதாரண வளர்ச்சி பெற்ற எலும்புகள், ஒன்றிணைந்து முதுகுத்தண்டில் முழுமை பெறாமல் இருப்பது முதுகெலும்பு டிஸ்ராபிசம் எனப்படுகிறது. இந்த நிலையில், முதுகெலும்பின் சில பாகங்கள் முழுமையான வளர்ச்சி பெறாமல் போக வாய்ப்புள்ளது. இது தண்டு வடத்திலும், நரம்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com