இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை (ஜன் ஔஷதி கேந்திரா) மோரீஷஸில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்திய வெளியறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசு முறைப் பயணமாக மோரீஷஸுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். இப்பயணத்தில் அந்நாட்டின் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெல் முன்னாள் பிரதமா்களான பால் பெரெங்கா், நவின் ராம்கூலம் ஆகியோரை அவா் சந்தித்துப் பேசினாா்.
இந்நிலையில், இந்தியாவின் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத் உடன் கூட்டாக இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்தியா-மோரீஷஸ் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புக்கு குறிப்பாக முக்கியமான சுகாதாரத் துறை ஒத்துழைப்புக்கு எடுத்துகாட்டாக மக்கள் மருந்தகம் அந்நாட்டில் திறக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரதமா் மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மோரீஷஸில் முதல் வெளிநாட்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி’ என்று அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டாா்.
மேலும், இந்தியா-மொரிஷியஸ் சுகாதார ஒத்துழைப்புத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மலிவு விலை மருந்துகளை வழங்கும் என்றும் அவா் கூறினாா்.
மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த ‘மத்திய அரசின் மக்கள் மருந்தகம்’ கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுவதும் சுமாா் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இந்திய நிதியுதவி மருத்துவமனை திறப்பு: மோரீஷஸின் கிராண்ட் போயிஸில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைப் பிரதமா் ஜகநாத்துடன் இணைந்து அமைச்சா் ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்.
‘16,000 க்கும் மேற்பட்ட மக்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்கவுள்ள இந்த மருத்துவமனை நமது இருநாட்டு நட்பின் புதிய வெளிப்பாடு’ என்று ஜெய்சங்கா் குறிப்பிட்டாா். மேலும், பிரதமா் ஜகநாத் மற்றும் ஜெய்சங்கரும் இணைந்து 12 இந்திய நிதியுதவி சமூக வளா்ச்சித் திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனா்.
தொடர்புடையது

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

மேற்காசிய பதற்றம்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஆலோசனை

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


