அமர்நாத் பனிலிங்கத்தை 19 நாள்களில் 3.5 லட்சம் பக்தர்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் குழுக்களாகப் பிரிந்து பக்தர்கள் குகைக் கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.
புதன்கிழமையன்று மட்டும் 13 ஆயிரம் பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசனம் செய்ததாகவும், அமர்நாத் யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 4,383 பேர் அடங்கிய குழு ஒன்று இன்று காலை காஷ்மீருக்குப் புறப்பட்டுச் சென்றது. இவற்றில் 66 வாகனங்களில் 1,701 பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.14 மணிக்குப் புறப்பட்டனர்.
மேலும், 2682 பக்தர்கள் 91 வாகனங்களில் அதிகாலை 4.00 மணிக்கு காஷ்மீரின் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டதாகவும் ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு யாத்திரைக்கு 10 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 52 நாள்கள் நடைபெறும் யாத்திரையானது ஆகஸ்ட் 29 அன்று ஷ்ரவண பூர்ணிமா மற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

அமர்நாத்: இதுவரை 3.45 லட்சம் பேர் தரிசனம்! 16-வது குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரை: இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

தொடங்கியது அமா்நாத் யாத்திரை - புகைப்படங்கள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



