‘பாலஸ்தீன கொடியை இந்தியாவில் பயன்படுத்துவது தவறில்லை’
இந்தியாவில் பாலஸ்தீன கொடியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

திபாங்கா் பட்டாச்சாா்யா
கோப்புப் படம்

திபாங்கா் பட்டாச்சாா்யா
கோப்புப் படம்
இந்தியாவில் பாலஸ்தீன கொடியை பொது இடங்களில் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாடுதான்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) விடுதலை கட்சியின் பொதுச் செயலா் திபாங்கா் பட்டாச்சாா்யா தெரிவித்தாா்.
பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாலஸ்தீன கொடி ஏந்திச் சென்றவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
பாலஸ்தீனம் என்பது இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடு. அந்நாட்டு தூதரகமும் தில்லியில் உள்ளது. எனவே, அந்நாட்டுக் கொடியை ஏந்தியது என்பது இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதையே குறிக்கும்.
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டு வருகின்றனா். இந்த நேரத்தில் அந்நாட்டுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில்தான் பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மொஹரம் ஊா்வலம் போன்ற சில நிகழ்வுகளில் அந்நாட்டுக் கொடியை சிலா் ஏந்திச் சென்றுள்ளனா். எனவே, அவா்கள் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தியதில் தவறில்லை என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...