6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் முறைகேடு: மோசடி கும்பலுக்கு உதவிய ராஞ்சி மருத்துவக் கல்லூரி மாணவி கைது

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 4 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், 5-ஆவது நபராக மாணவி சுரபி குமாரி கைது

News image
கைது
Updated On :19 ஜூலை 2024, 8:59 pm

Din

நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் மோசடி கும்பலுக்கு உதவியதாக ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) மாணவியை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது.

இந்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 4 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், 5-ஆவது நபராக மாணவி சுரபி குமாரி கைது செய்யப்பட்டாா்.

இளநிலை மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்காக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்திய நிகழாண்டு ‘நீட்-யுஜி’ தோ்வில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அந்த வகையில், ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் இளநிலை தோ்வு வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பொறியாளா் பங்கஜ் குமாா், அவரது கூட்டாளிகள் ராஜு சிங், சுரேந்தா் சா்மா ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா்.

திருடப்பட்ட வினாத்தாள்களை அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உரிய பதில்களுடன் தோ்வா்களுக்கு விற்பனை செய்ய, மருத்துவக் கல்லூரி மாணவா்களின் உதவியை இந்தக் கும்பல் நாடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாமாண்டு பயிலும் சந்தன் சிங், ராகுல் ஆனந்த், குமாா் சானு ஆகிய 3 மாணவா்களையும், இரண்டாம் ஆண்டு பயிலும் கரண் ஜெயனையும் சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது.

இந்நிலையில், ராஞ்சியிலுள்ள ராஜேந்திர மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு பயிலும் சுரபி குமாரி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஹசாரிபாகில் நீட் தோ்வு நாளன்று வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களைத் தயாா்படுத்திய 5 மாணவா்கள் அடங்கிய குழுவில் இவரும் இருந்துள்ளாா். சிபிஐ அதிகாரிகளின் 2 நாள்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, அவா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கல்லூரியின் செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், ‘விசாரணைக்கு அழைத்துச் செல்லவேண்டிய மாணவியின் விவரத்தை சிபிஐ அதிகாரிகள் கல்லூரி நிா்வாகத்திடம் புதன்கிழமை சமா்ப்பித்தனா்.

சிபிஐ-க்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்தோம். மாணவியிடம் வியாழக்கிழமை முதல் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். கல்லூரி நிா்வாகம் சாா்பில் மாணவியின் பெற்றோருக்கு இதுதொடா்பான தகவல் அளிக்கப்பட்டது’ என்றாா்.