உத்தரகண்ட் மாநிலத்தின் அடையாளம் என சொல்லப்படும் ருத்ரபிரயாக் பகுதியில் அமையவுள்ள பாலம் கட்டுமான பணியின்போதே இடிந்து விழுந்தது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த பாலம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ரூ. 76 கோடி செலவில் 40 மீட்டர் உயரத்தில் 110 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்தப் பாலம், ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடிந்து விழுந்தது. அப்போது 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், டெண்டர் ஆர்சிசி இன்ஃப்ராவென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
முன்னதாக இடிந்து விழுந்த சம்பவத்தில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கன்ஹையா குமார், பங்கஜ் குமார் ஆகியோர் பாலத்தின் அடித்தளத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










