பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை: சிராக் பஸ்வான்

திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

News image

சிராக் பாஸ்வான்

பிடிஐ

Updated On :20 ஜூலை 2024, 2:26 pm

DIN

இதுகுறித்து பிடிஐ செய்தி ஆசிரியர்களுடன் அவர் உரையாடியதாவது, 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'மைலே நா மிலே ஹம்' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்துடன் அறிமுகமானேன். அந்த படம் தோல்வியை தழுவியது. நான் மிகவும் மோசமான நடிகர்.

கங்கனா உட்பட எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னுடன் படம் செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அடுத்த ஆண்டு பிகார் தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால் என்னுடைய முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை.

ஏனென்றால் திருமணமும் ஒரு பெரிய பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி பிகாரில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் ஹாஜிபுர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.