
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நிஃபா வைரஸ் தொற்று கேரளத்தில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனையின் முடிவில் பாதிக்கப்பட்ட நபருக்கு நிஃபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என தெரிய வரும்.
இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் சனிக்கிழமை(ஜூலை 20) வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நிஃபா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு குழுக்களை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.