அரசு வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
கேரளத்தில் தற்போது உள்ள இடஒதுக்கீட்டு முறையில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு வழங்குமாறு திட்ட அறிக்கை ஒன்றை மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அம்மாநில சமூக நீதித்துறை சமர்ப்பித்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின்படி, மாநில அரசுப் பணியாளர் தேர்வில் தகுதி பெற்ற மூன்று திருநங்கைகளை அந்தந்தப் பிரிவுகளின் கீழ் நியமிக்கக் கூடுதல் பதவிகளை உருவாக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, முறையான இடஒதுக்கீட்டுக் கட்டமைப்பு செயல்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முறையான இடஒதுக்கீட்டுக்கான திட்ட அறிக்கை மாநில அமைச்சரவையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கேரள சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மூன்றாம் பாலினத்தவரின் முன்னேற்றத்துக்கு இது போன்ற திட்டங்கள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The Kerala government has come forward to provide 1% reservation for transgenders in government jobs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!

பள்ளி மாணவிகளுக்கு 3 நாள்கள் மாதவிடாய் விடுப்பு - கேரள அரசு திட்டம்
குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்
கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



