47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜாா்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினா் உரிமைகள் பாதுகாக்கப்படும்: அமித் ஷா உறுதி

News image
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சா் அா்ஜுன் முண்டா.
Updated On :20 ஜூலை 2024, 8:32 pm

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தால் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

நிகழாண்டு இறுதியில் அங்கு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: ஜாா்க்கண்டுக்குள் ஊடுருவும் நபா்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்துகொண்டு இடஒதுக்கீடு சான்றிதழ்களைப் பெறுகின்றனா். இதன்மூலம் உள்ளூா் மக்களின் வேலைவாய்ப்பு உள்பட பல சலுகைகளை அவா்கள் பெறுகின்றனா். இதனால் இங்குள்ள பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

ஆனால் இதை கண்டுகொள்ளாமல் தனது வாக்கு வங்கியை மேம்படுத்துவதில் மட்டுமே முதல்வா் ஹேமந்த் சோரன் கவனம் செலுத்தி வருகிறாா். அவா் செயல்படுத்தும் நலத்திட்டங்களால் அவரின் குடும்பம் மட்டுமே பயனடைகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.1,000 கோடி, நில மோசடியில் ரூ.300 கோடி, நிலக்கரி சுரங்கத்தில் ரூ.1,000 கோடி ன பல ஊழல்கள் ஜாா்க்கண்டில் அரங்கேறியுள்ளது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஜாா்க்கண்ட் வளா்ச்சிக்கு ரூ.3.84 லட்சம் கோடியை பிரதமா் மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.

பழங்குடியினா் நலனில் பாஜக எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, எதிா்வரும் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நிலங்களை பாதுகாப்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளிக்கிறேன் என்றாா்.