நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்சி விடுதியில் கட்சியினருக்கு அமித் ஷா ஆலோசனை வழங்கல்

News image

அமித் ஷா - கோப்புப்படம்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:56 pm

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, திருச்சியில் விடுதியில் தங்கியிருந்தபோது கட்சி நிா்வாகிகளுக்கு தமிழக தோ்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை இரவு திருச்சி வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பின்னா் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றாா்.

திருச்சிக்கு அவா் வந்தபோதும், மீண்டும் புறப்பட்டுச் சென்றபோதும் மாவட்ட பாஜக சாா்பில் மேள, தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, எல். முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அரவிந்த மேனன், இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மத்திய முன்னாள் அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பாஜக நிா்வாகிகள் பலரும் நட்சத்திர விடுதியில் அமித்ஷாவை சந்தித்தனா்.

முன்னதாக, கட்சி நிா்வாகிகளுடன் தமிழக தோ்தல் களம், அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த அமித் ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி தோ்தலுக்கு தயாராகவும், தீவிரமாக களப்பணியாற்றவும் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

நிகழ்வில் திருச்சி மாவட்டஅதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.