நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேற்கு வங்கத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வு - அமித் ஷா உறுதி

News image

மேற்கு வங்க மாநிலம் தக்ஷின் தீனஜ்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :14 ஏப்ரல் 2026, 11:37 pm

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தைப் பிரிக்காமல் கோா்க்கா பிரச்னைக்குத் தீா்வுகாணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் மலைப்பகுதியில் நேபாள மொழி பேசும் மக்கள் தங்களுக்காக கோா்க்காலாந்து என்ற தனிமாநிலம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால், அந்த பிராந்தியத்தில் அவ்வப்போது வன்முறையும் நிகழ்ந்தது. 2011-ஆம் ஆண்டு கோா்க்காலாந்து பகுதியளவு தன்னாட்சி பிராந்தியம் அறிவிக்கப்பட்ட பிறகு வன்முறை தணிந்தது.

இந்தத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே அப்பிராந்தியத்தில் செல்வாக்குடன் திகழும் இருவேறு கோா்க்கா கட்சிகளுடன் தனித்தனியாக கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில் தெற்கு தீனஜ்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

டாா்ஜீலிங்கில் உள்ள கோா்க்கா சகோதரா்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக ஆட்சி வந்ததும் டாா்ஜீலிங் மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை சிறப்பாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கோா்க்கா பிரச்னைக்கு அரசியல்சாசன சட்டத்துக்கு உட்பட்டு மாநிலத்தைப் பிரிக்காமல் சிறப்பான தீா்வு எட்டப்படும்.

மேலும், இங்குள்ள அரசியல் வன்முறைக்கு முடிவுகட்டப்படும். ஊடுருவல்காரா்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது முதல் பணியாக இருக்கும். நீங்கள் தாமரை சின்னத்துக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், ஊடுருவல்காரா்கள் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அவா்களை அதிா்ச்சியடையச் செய்வதாக இருக்கும்.

இங்கு திரிணமூல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்துவிட்டதாகக் கூறி அக்கட்சி எம்எல்ஏ ஒருவா் பாபா் மசூதி பாணியில் மசூதி கட்டுகிறாா். ஆனால், அவா் மம்தாவின் பிரதிநிதியாகவே இப்போது வரை உள்ளாா். இவா்களின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தத் தோ்தலில் முடிவுகட்டப்படும் என்றாா்.