இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி: ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என்று மக்களவையில் ராகுல் குற்றச்சாட்டு


புது தில்லி: பணமிருந்தால் தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்க முடியும் என மக்கள் நினைப்பதாகவும் இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.
மக்களவை இன்று காலை கூடியதும், நீட் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மக்களவையில் கேள்வி எழுப்பினார். பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி என மக்களவையில் நீட் விவகாரம் குறித்து ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.
நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை உள்ளன. மத்திய அமைச்சரோ, தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குறைசொல்கிறார். தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே அவருக்குப் புரிகிறதா என தெரியவில்லை என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.
நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவரிடம் பணமிருந்தால், தேர்வு முடிவுகளை விலைக்கு வாங்கி விடலாம் என்றுதான், மக்களின் எண்ணத்தையே எதிர்க்கட்சிகளும் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தொடர்ந்து, பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசு, தேர்வு வினாத்தாள் கசிவில் புதிய சாதனைகள் படைத்து வருவதாகவும் நாடு முழுவதும்மாணவர்கள் போராடி வருகிறார்கள், மறுபக்கம் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி பலரும் கைதாகி வருகிறார்கள். இவரே அமைச்சராக நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது என்றார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தொடர்ந்து, பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசு, தேர்வு வினாத்தாள் கசிவில் புதிய சாதனைகள் படைத்து வருவதாகவும் நாடு முழுவதும்மாணவர்கள் போராடி வருகிறார்கள், மறுபக்கம் விசாரணையில் பல உண்மைகள் வெளியாகி பலரும் கைதாகி வருகிறார்கள். இவரே அமைச்சராக நீடித்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது என்றார்.
மேலும், மக்களவையில் நீங்கள் கத்துவதால், அது உண்மையாகிவிடாது, நாட்டின் தேர்வு முறையே ஒரு மோசடி என்று கூறியிருக்கிறீர்கள், மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த மிக மோசமான தகவலில் இதுதான் அதிகபட்சமாக இருக்கும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
மேலும், 2010ஆம் ஆண்டு கபில் சிபல், மூன்று சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை ஒரு சட்ட மசோதா தடுக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், அதில் என்ன பிரச்னை இருந்தது? யாருடைய அழுத்தம் காரணமாக, அந்த மசோதா திரும்பப்பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுத்த அழுத்தமா? ஆனால் தற்போது நீங்கள் எங்களைக் கேள்வி கேட்கிறீர்க என்று பிரதான் பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...