
ஹரியாணாவில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனது தாய், சகோதரர், அண்ணி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் அவர்களை தகனம் செய்யவும் அவர் முயன்றுள்ளார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த போலீசார் பாதி எரிந்த உடல்களை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பலியானவர்கள் 65 வயதான அவரது தாய் சரோபி, 35 வயதான சகோதரர் ஹரிஷ், அவரது மனைவி சோனியா, ஐந்து வயது மகள் மற்றும் ஆறு மாத குழந்தை என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்த இருவர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைத்து உடல்களையும் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பௌரியா அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினார். மேலும், குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில் நாராயண்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.